இந்தியாவில் அறுவை சிகிச்சை பிரசவங்களின் எண்ணிக்கை இதுவரையிலும் இல்லாத அளவிற்கு தற்பொழுது அதிகரித்து வருவதாகவும் சென்னை ஐ.ஐ.டி தரப்பிலிருந்து நடத்திய ஆய்வில் தகவல் வெளிவந்துள்ளது.
சென்னை ஐ.ஐ.டி தரப்பிலிருந்து டாக்டர் சிரிஜா, செல்வி ஆராய்ச்சியாளராக வர்ஷினி நீதிமோகன், டாக்டர் கிரிஜா வைத்தியநாதன், பேராசிரியர் முரளிதரன் ஆகியோர் அடங்கிய குழு மானுடவியல் மற்றும் சமூக அறிவியல் துறை சார்ந்த ஆராய்ச்சிகளை மேற்கொண்டது. இந்த ஆராய்ச்சியின் முடிவில் சில தகவல்கள் வெளிவந்தது அவர்கள் வெளியிட்ட தகவலின் படி 2016 முதல் 2021 இடைப்பட்ட ஆண்டுகளில் நாடு முழுவதும் அறுவை சிகிச்சை பிரசவங்கள் எண்ணிக்கை கடுமையாக அதிகரித்துள்ளதாகவும் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர்.
நகர்ப்புறங்களில் வசிக்கும் பெண்கள் அதிக அளவில் அறுவை சிகிச்சை பிரசவத்தை மேற்கொள்வதாகவும் ஆராய்ச்சியில் வெளிவந்துள்ளது. இதை தவிர உடல் பருமன் அதிகமாக இருக்கும் பெண்கள் அறுவை சிகிச்சையை மேற்கொண்டு வருவதாகவும் இவர்கள் குழந்தை பெற்றுக் கொள்ளும் விகிதம் 3 சதவீதத்திலிருந்து தற்பொழுது 18.7 சதவீதமாக அதிகரித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
மேலும் 35 வயது முதல் 49 வயதிற்கு இடைப்பட்ட வயதுடைய பெண்கள் குழந்தை பெறுவது 11.1% இருந்து தற்பொழுது 10.9% குறைந்துள்ளதாக ஆய்வு தரப்பில் இருந்து கூறப்படுகிறது. தனியார் மருத்துவமனையில் நான்கு மடங்கு அறுவை சிகிச்சை பிரசவங்கள் அதிகரித்துள்ளதாகவும் குறிப்பாக சத்தீஸ்கரில் அறுவை சிகிச்சை பிரசவங்கள் பத்து மடங்கு உயர்ந்திருப்பதாகவும் கூறப்படுகிறது தமிழ்நாடு பொறுத்த வரை மூன்று மடங்கு அறுவை சிகிச்சை பிரசவங்கள் தற்பொழுது உயர்ந்திருப்பதாகவும் ஆய்வு தரப்பில் இருந்து தகவல் வெளியாகி உள்ளது.