கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள பத்தனம்திட்டா சிற்றார் பகுதியை சேர்ந்த வாலிபருக்கு பிளஸ் 1 படிக்கும் மாணவி ஒருவருடன் இன்ஸ்டாகிராம் மூலமாக பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கத்தால் இரண்டு பேரும் நெருக்கமாகியுள்ளனர் . அது மட்டும் இன்றி இருவரும் தங்களது புகைப்படங்களை பரிமாறி உள்ளனர் . மேலும் அந்த வாலிபர் மாணவியின் புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் பதிவிடுவதாக மாணவியை மிரட்டியுள்ளார் .
மாணவியின் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அந்த வாலிபர் சென்று மாணவியை மிரட்டி பாலியல்பலாத்காரம் செய்துள்ளார் . மேலும் மாணவியின் புகைப்படத்தை மற்ற நண்பர்களுக்கும் ஷேர் செய்துள்ளார் . அந்த புகைப்படங்களை வைத்து அவரது நண்பர்களும் மாணவியை மிரட்டி பாலியல்பலாத்காரம் செய்துள்ளனர் . மேலும் அவர்களது தொல்லை அதிகரித்ததால் மாணவி பள்ளிக்கு செல்வதை நிறுத்திவிட்டார் . மாணவியின் செயலில் சந்தேகம் அடைந்த பெற்றோர்கள் மாணவியை குழந்தைகள் நல அமைப்பினரிடம் அழைத்துச் சென்றுள்ளனர் அங்கு நடத்தி விசாரணையில் , மாணவி உண்மையை கூறியுள்ளார் .
விசாரணையை முடித்த பின்னர் குழந்தைகள் நல அமைப்பினர் பத்தனம்திட்டா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இந்த தகவலின் அடிப்படையில் போலீசார் மாணவியிடம் விசாரணை நடத்தினர் விசாரணையில் மாணவியுடன் ஒன்றாக படித்து வந்த மாணவர் உட்பட 18 பேர் மாணவியை பாலியல்பலாத்காரம் செய்தது தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக மாணவியுடன் படித்து வந்த நான்கு மாணவர்களை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். ஒரு மாணவியை 18 பேர் பாலியல்பலாத்காரம் செய்த சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .