ஆண்டுதோறும் கேரளா அரசு கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகையை கொண்டாடும் விதமாக பம்பர் லாட்டரி குழுக்கள் ஆண்டுதோறும் நடைபெறும் அந்த வகையில் கடந்த 24ஆம் தேதி பம்பர் லாட்டரி குழுக்கள் நடைபெற்றது. அந்த பம்பர் லாட்டரி ஒரு சீட்டின் விலை ரூ. 400 – க்கு விற்பனை செய்தனர். ஒட்டுமொத்தமாக 45 லட்சத்திற்கு லாட்டரி சீட்டுகள் விற்பனையாகியது. இந்த பம்பர் லாட்டரி குழுக்கள் சீட்டில் முதல் பரிசு ரூ. 20 கோடி என அறிவித்திருந்தனர். அதன்படி குழுக்கள் நடைபெற்றதில் எக்ஸ் சி 224091 என்ற எண்ணிற்கு முதல் பரிசு 20 கோடி லாட்டரி அடித்தது.
இதைத் தொடர்ந்து பாலக்காட்டில் மொத்த வியாபாரிகளிடமிருந்து லாட்டரி சீட்டு வாங்கி திருவனந்தபுரத்தில் விற்பனை செய்யப்பட்டது. மேலும் முதல் பரிசு வெற்றி பெற்றவர் யார் என்று தெரியாமல் குழப்பம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து புதுச்சேரியில் இருந்து சபரிமலைக்கு வந்த பக்தர் ஒருவர் தரிசனம் முடித்துவிட்டு திருவனந்தபுரத்தில் உள்ள பத்மநாபசுவாமி கோயிலில் இந்த லாட்டரி சீட்டை வாங்கியது தெரியவந்தது.
முதல் பரிசு பெற்ற நபர் அவருடைய பெயர் மற்றும் விபரங்களை வெளியிட வேண்டாம் என்று கேரளா லாட்டரி இயக்குனர்களிடம் தெரிவித்தார். அதை தொடர்ந்து அவர் பெயர் மற்றும் விபரங்கள் வெளிவரவில்லை. இருந்தபோதிலும் அவர் புதுச்சேரியை சேர்ந்தவர் என்ற விபரம் மட்டும் வெளியானது. தொடர்ந்து அந்த ஐயப்ப பக்தர் லாட்டரி சீட்டை அலுவலகத்தில் ஒப்படைத்து பரிசுத்தொகையை பெற்றுக் கொண்டார். மேலும் வரி நீக்கலாக கிடைத்த மொத்த தொகை ரூ. 12. 60 கோடி என தெரியவந்துள்ளது.