மராட்டிய மாநிலம் மும்பையில் இளைஞர் ஒருவர் சிக்கன் ஷவர்மா சாப்பிட்டு பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 19 வயதுடைய அந்த இளைஞர் கடந்த 3 தேதி சிக்கன் ஷவர்மா சாப்பிட்டுள்ளார். சாப்பிட்ட சிறிது நேரத்தில் வாந்தி மற்றும் வயிறு வலி ஏற்பட்டது. இது கண்ட பெற்றோர் உடனடியாக அருகில் இருந்த மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். மருத்துவமனைக்குச் சென்ற சிறிது நேரத்திலேயே அந்த இளைஞரின் உடல்நிலை மிக மோசமான நிலைகளுக்கு தள்ளப்பட்டது. இதைத் தொடர்ந்து அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர் தனியார் மருத்துவமனையில் அந்த இளைஞருக்கு சிகிச்சை அளித்து பின் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.
வீட்டிற்க்கு அழைத்து வந்த இளைஞர் அன்று மாலையை அவரது உடல்நிலை மிக மோசமான நிலைக்கு தள்ளப்பட்டது. மீண்டும் அதே தனியார் மருத்துவமனைக்கு அவரது பெற்றோர் அழைத்துச் சென்றனர். அந்த இளைஞருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதை தொடர்ந்து நேற்று முன் தினம் அந்த இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பிறகு அந்த இளைஞரை பிரேத பரிசோதனை செய்த மருத்துவர்கள் அந்த இளைஞர் சிக்கன் ஷவர்மா சாப்பிட்டதனால் உயிரிழந்து உள்ளார் என்பது தெரியவந்துள்ளது. பின்பு வழக்கு பதிவு செய்து போலீசார் அந்த சிக்கன் ஷவர்மா கடையை சோதனை செய்தனர். கடையின் உரிமையாளரை கைது செய்து கடைக்கு சீல் வைக்கப்பட்டது.