கேரளா மாநிலத்தில் கடந்த சில நாட்களாகவே தென்மேற்கு பருவமழை தீவிர தன்மையில் காணப்பட்ட வருகிறது இதை தொடர்ந்து அங்கு பலவிதமான நோய்தொற்றுகள் பரவி வருகிறது. பல இடங்களில் காய்ச்சலானது தீவிர தன்மையில் இருந்து வருகிறது இதுவரை மலப்புரம் மாவட்டத்தில் 2007 பேருக்கு தீவிர காய்ச்சலில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதைத் தொடர்ந்து கோழிக்கோடு மாவட்டத்தில் பரவலாக அனைவருக்குமே இந்த காய்ச்சலானது காணப்பட்டு வருகிறது மேலும் திருவனந்தபுரம், பாலக்காடு, எர்ணாகுளம் என கேரளாவில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் இந்த தீவிர காய்ச்சலானது காணப்பட்டு வருகிறது.
இந்த நிலையை தொடர்ந்து திருச்சூரில் எலி காய்ச்சலால் இரண்டு பெண்கள் பலியாகி இருப்பது அந்தப் பகுதியில் மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதைத்தொடர்ந்து இந்த எலி காய்ச்சலினால் மாவட்டம் முழுவதும் 8 பேர் உயிரிழந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரளா சுகாதாரத்துறை அதிகாரிகள் டெங்கு மற்றும் எலிக்காய்ச்சல் மிகத் தீவிரமாக பரவி வருவதால் அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. கேரள மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் பல்வேறு வகையான காய்ச்சல் நோயால் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதுவரை பல மர்ம காய்ச்சலினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12 ஆயிரத்தை கடந்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது போன்ற பல மர்ம காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதால் சுகாதாரத்துறை அதிகாரிகள் கட்டுப்படுத்துவதற்கு தீவிர நடவடிக்கையை ஏற்படுத்தி உள்ளனர்.