தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாகவும் பிரபல நட்சத்திரமாகும் வலம் வருபவர் நயன்தாரா. இவர் தமிழ் மட்டுமின்றி மற்ற மொழிகளிலும் திரைப்படங்களில் நடித்து வருகிறார். சமீப காலமாக தொழில் செய்வதில் அதிக ஈடுபாடு காட்டி வருகிறார் அதை தொடர்ந்து நாப்கின், லிப் பாம் போன்ற நிறுவனத்தில் முதலீடு செய்து வருகிறார். 9 Skin என்ற பெயரில் நிறுவனத்தை தொடங்கி அழகு சாதன பொருட்கள் விற்பனை வெற்றிகரமாக நடத்தி வருகிறார்.
தற்பொழுது நடிகை நயன்தாரா முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானி உடன் தொழிலில் கைகோர்க்கிறார். எனவே இவர் 9 Skin நிறுவனத்தை முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானி நிறுவனத்துடன் சமீபத்தில் ஒப்பந்தம் செய்திருப்பதாகவும் விரைவில் இணைந்து நடத்த இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது.
மேலும் நயன்தாராவின் 9 Skin அழகு சாதன பொருட்கள் இஷா அம்பானி நடத்திவரும் Tira இணையதளத்தில் பெற்றுக் கொள்ளலாம் என்றும் தகவலை வெளியாகி உள்ளது. இஷா அம்பானிக்கும் நடிகை நயன்தாராவிற்கும் ஜவான் திரைப்படத்தின் மூலம் நட்பு ஏற்பட்டதாகவும் தற்பொழுது தொழில் ரீதியாக நட்பு தொடர்ந்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.