ஒடிசா மாநிலம் கஞ்சமின் மாவட்டத்தில் பெர்ஹாம்பூர் நகரில் பூஜ்ஜி அம்மா இவருடைய வயது 50 இவர் வீட்டிலிருந்தபொழுது திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது இதைத் தொடர்ந்து அவர் உடலானது 50 சதவீதத்திற்கு மேல் பாதிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவரை மீட்டு அருகில் இருந்த எம்.கே.சி.ஜி மருத்துவக் கல்லூரியில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு முதலுதவி அளித்து அவரை உயர் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் கொண்டு செல்ல வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தினர் அதைத் தொடர்ந்து புஜ்ஜி அம்மா மிகவும் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவர் இதன் காரணமாக அவரை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லாமல் வீட்டிற்கு கொண்டு வந்துள்ளனர். தொடர்ந்து உயிருக்காக போராடி வந்த புஜ்ஜி அம்மாள் கடந்த 12ஆம் தேதி எந்த ஒரு அசைவும் இன்றி மூச்சு இல்லாமல் இருந்தார். இதை கண்ட உறவினர்கள் புஜ்ஜி அம்மாள் உயிரிழந்து விட்டதாக நினைத்து இறுதி சடங்கிற்கு ஏற்பாடு செய்தனர்.
இதை தொடர்ந்து உறவினர்கள் அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்லாமல் இறுதி சடங்கை மேற்கொண்டு உள்ளனர். அருகில் இருந்த மயானத்திற்கு வாகனத்தில் அவரது உடல் எடுத்து சென்றிருந்தனர். புஜ்ஜி அம்மாவின் உறவினர்கள் அவரை தகனம் செய்வதற்காக அனைத்து ஏற்பாடுகளையும் செய்து கொண்டிருந்த பொழுது அவர் திடீரென்று கண்களை திறந்து பார்த்து எழுந்து உட்கார்ந்தார் இதை கண்ட உறவினர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.
அதை தொடர்ந்து புஜ்ஜி அம்மாள் வீட்டிற்கு அழைத்துவரப்பட்டு மீண்டும் அருகில் இருந்த எம்.கே.சி.ஜி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறார்.