மத்திய பிரதேசம் ரத்லம் மாவட்டத்தைச் சேர்ந்த தீபிகா கோத்தாரி என்ற பெண் காவலராக பணிபுரிந்து வருகிறார். இவர் சில நாட்களாகவே தன்னை ஆணாக உணர்ந்து வந்த நிலையில் பல சிக்கல்களையும் பல பிரச்சினைகளையும் சந்தித்து வந்துள்ளார்.
இதைத் தொடர்ந்து தீபிகா கோத்தாரி என்ற காவலர் பாலின அறுவை சிகிச்சை மூலம் ஆணாக மாறுவதற்கு முடிவு செய்துள்ளார். மேலும் இதற்காக மாநில அரசுக்கு தான் அரசு ஊழியர் என்பதால் பாலின அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்கு அனுமதி கேட்டு விண்ணப்பித்துள்ளார்.
இவருடைய கோரிக்கையை ஏற்றுக்கொண்ட மாநில உள்துறை தீபிகா கோத்தாரி பாலின அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்கு மாநில அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதைத் தொடர்ந்து இதுவரை தீபிகா கோதாரி பெண் காவலராக இருந்து பெண்ணுக்கு கிடைக்க வேண்டிய அனைத்து சலுகையும் கிடைத்தது ஆனால் பாலின அறுவை சிகிச்சை செய்த பிறகு அது போன்ற சலுகைகள் கிடைக்காது என்றும் மாநில உள்துறை குறிப்பிட்டுள்ளது.