புதுச்சேரியில் முதலமைச்சர் தீபாவளி பண்டிகை முன்னிட்டு அதிரடி சலுகைகளை வழங்கி வருகிறார். இதை தொடர்ந்து கட்டிட தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ் ஆக ரூ. 5000 தரப்படும் என்ற அறிவிப்பை தற்பொழுது வெளியிட்டுள்ளார். மேலும் தீபாவளி பண்டிகையை கொண்டாடும் விதமாக ரூ. 1000 மதிப்புள்ள 10 பொருட்கள் வெறும் 500 ரூபாய்க்கு மலிவு விலையில் பெற்றுக்கொள்ளலாம் என்று அறிவிப்பையும் கொடுத்துள்ளார்.
மேலும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரேஷன் கடைகளில் இலவச அரிசி, சர்க்கரை வழக்கம்போல் வழங்கப்படும் என்றும் கான்பெட் நிறுவனம் மூலம் ரூ. 1000 மதிப்புள்ள பத்து பொருட்கள் வெறும் 500 ரூபாய்க்கு ரேஷன் கார்டை காட்டி வாங்கிக் கொள்ளலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.