திரையரங்குகளின் கட்டணத்தை உயர்த்துவதற்கு தற்போது புதுச்சேரி அரசு அனுமதி வழங்கியுள்ளது . இது நாளை முதல் அமலுக்கு வருகிறது . இந்த அனுமதியின் பேரில் ரூ. 10 முதல் ரூ. 30 வரை மட்டுமே அதிகரிக்க வேண்டும் என்று அறிவித்துள்ளனர் .
திரையரங்குகளின் உரிமையாளர்கள் டிக்கெட் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்று சமீபத்தில் புதுச்சேரி அரசுக்கு மனு அளித்தனர் . இந்த மனுவை ஏற்றுக் கொண்ட அரசு தற்போது கட்டண உயர்வுக்கான ஒப்புதலை அளித்துள்ளது . இதன்படி 3ஆம் வகுப்பு டிக்கெட் கட்டணம் 50 ரூபாயிலிருந்து 60 ரூபாயாக உயர்த்தப்படுகிறது . 2ஆம் வகுப்பு டிக்கெட் கட்டணம் 75 ரூபாயிலிருந்து 100 ரூபாயாகவும் , 1ஆம் வகுப்புக்கு டிக்கெட் கட்டணம் 100 ரூபாயிலிருந்து 130 ரூபாயாக உயர்த்தப்பட உள்ளது . மேலும் பால்கனி டிக்கெட் கட்டணம் 150 ஆக இருந்த நிலையில் தற்போது 170 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது . 160 ஆக இருந்த பாக்ஸ் டிக்கெட் கட்டணம் 180 ஆக உயர்த்தி உள்ளனர் . இதில் அதிகபட்சமாக 30 ரூபாய் முதல் குறைந்தபட்சமாக பத்து ரூபாய் மட்டுமே உயர்த்த வேண்டும் என்று தெரிவித்துள்ளனர் .