சோனியா காந்தியிடம் விவசாய பெண் ஒருவர் ராகுல் காந்தி அவர்களுக்கு எப்போது திருமணம் என்று கேட்ட பொழுது அவர் மிக சுவாரசியமாக பதில் கூறியுள்ளார்.
அரியானா மாநிலம் சோனிபட் பகுதியைச் சேர்ந்த விவசாயி பெண்களை சந்தித்த ராகுல் காந்தி அந்த பெண்களின் விருப்பதைபடி,டெல்லியில் உள்ள அவரது வீட்டிற்கு அழைத்து சென்று அவர்களுக்கு விருந்து ஒன்று வைத்தார்.அப்போது அந்த விருந்தில் அவர்களுடன் சோனியா காந்தி நடனமாடும் வீடியோ வெளியாகியுள்ளது.அந்த வீடியோ அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
இதைத்தொடர்ந்து ராகுல் காந்தி புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.அந்த வீடியோவில் ராகுல் காந்திக்கு எப்போது திருமணம் என்று ஒரு பெண் ஒருவர் வெகுளித்தனமாக கேட்டுள்ளார்.அதற்கு சோனியாகாந்தியின் பதில் “நீங்கள் ஒரு பெண்ணை கண்டுபிடுத்து தாருங்களே”என்று வெகுளியாக பதிலாலித்துள்ளார்.இந்த வீடியோ வெளி வந்து தற்போது அனைவரின் கவனத்தையும் பெற்றுள்ளது.