டாடா நிறுவனத்தின் தலைமை பொறுப்பை வகித்து வந்த பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடா தன்னுடைய கடின உழைப்பாலும், தன்னம்பிக்கை நாளும் இன்று மிகப்பெரிய தொழிலதிபராக வளர்ந்துள்ளார். தற்பொழுது இவருடைய வயது 86 கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல் நல கோளாறு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதன் பிறகு சிகிச்சை மேற்கொண்டு வீடு திரும்பினார். எக்ஸ் வலைத் தளத்தில் தான் நலமுடன் இருப்பதாகவும் பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார் ரத்தன் டாடா.
இதைத் தொடர்ந்து நேற்று இரவு திடீரென்று மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி ரத்தன் டாடா உயிரிழந்தார்.
ரத்தன் டாட்டாவின் மறைவு செய்தி பலருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. திரை பிரபலங்களும் அரசியல் தலைவர்கள் என பலரும் ரத்தம் டாடாவிற்கு அவர்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். இதை தொடர்ந்து டாடாவில் பணியாற்றும் ஊழியர்கள் இவரின் இறப்புச் செய்தியை கேட்டு பெரும் கலக்கத்திற்கு ஆளாகினர்.