பிரபல தொழிலதிபரும் டாடா குழுமத்தின் தலைவருமான ரத்தன் டாடா இவரது வயது 86 சமீபத்தில் உடல் நலக் கோளாறு காரணமாக உயிரிழந்தார். ரத்தன் டாடாவிற்கு சொத்துக்கள் ஏராளம். அந்த சொத்துக்கள் அவருக்குப் பிறகு யார் யாருக்கு கிடைக்க வேண்டும் என்று உயில் எழுதி வைத்திருந்தார். அதன் விவரம் தற்பொழுது வெளியிடப்பட்டுள்ளது.
ரத்தன் டாடாவிற்கு ரூ.10,000 கோடிக்கு மேல் சொத்துக்கள் இருக்கிறது ஆனால் அதில் பெரும் பகுதி டாடா அறக்கட்டளைக்கு சொந்தமானது என்றும் குறிப்பிட்டிருந்தார். ரத்தன் டாடாவின் கடைசி காலத்தில் அவருடன் நெருங்கி இருந்தவர்களுக்கு சில சொத்துக்களை எழுதி வைத்துள்ளார். அதன் படி அவரது உதவியாளர் சாந்தனு நாயுடு, அவர் வீட்டில் நீண்ட காலமாக சமையல் வேலை செய்த சுப்பையா, அவரது வீட்டு வேலை செய்து வந்த ராஜன் ஷா என்பவருக்கும் அவரின் வளர்ப்பு நாயான டிட்டோ மேலும் அவரது வளர்ப்பு நாயை ராஜன் கவனித்துக் கொள்ள வேண்டும். மேலும் அவரது வளர்ப்பு நாயின் செலவிற்காக சில பங்கையும் ஒதுக்கி வைத்துள்ளார்.
இதைத்தொடர்ந்து அவரது சகோதரர் ஜிம்மி டாடா மற்றும் ஒன்றுவிட்ட சகோதரர் ஷிரீன் மற்றும் டீன்னா ஆகியோருக்கு சொத்துக்கள் கிடைக்கும் படி உயில் எழுதி வைத்துள்ளார்.