புதுச்சேரியில் கடந்த 19 – ஆம் தேதி கடல் அலையானது நீல நிறத்தில் காணப்பட்டது. இதைத் தொடர்ந்து மறுநாள் பச்சை நிறத்தில் கடல் அலைகள் மாறியது. தொடர்ந்து இரண்டு நாட்கள் பச்சை நிறத்திலேயே கடல் அலைகள் காணப்பட்டது. இதன் காரணமாக கடலில் ஜெல்லி மீன்கள் மற்றும் பாம்புகள் செத்து கரை ஒதுங்கிய காட்சிகள் காணப்பட்டது.
இதன் காரணமாக சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் கடலில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டது. கடல் வாழ் உயிரின ஆராய்ச்சியாளர்கள் தற்பொழுது ஆய்வை மேற்கொண்டு வருகின்றனர். கடல் அலைகள் திடீரென பச்சை நிறத்தில் காணப்படுவதற்கு மைக்ரோ ஆல்கா நாட்டிலுக்கா என்ற கடல்பாசி தான் இதற்கான காரணம் என்று ஆராய்ச்சியாளர்கள் தகவலை வெளியிட்டுள்ளனர்.
இதனிடையே நேற்று காலை முதல் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் குளிப்பதற்கு அனுமதிக்கப்பட்டனர். ஆனால் திடீரென நேற்று மாலை கடலானது சுமார் 30 அடி தூரத்திற்கு உள்வாங்கியது. மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
கடல் அலையின் நிறம் ஆனது நீலம் மற்றும் பச்சை நிறத்தில் தோன்றியதை தொடர்ந்து தற்பொழுது கடல் 30 அடி தூரத்திற்கு உள்வாங்கியது. மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இருந்த போதிலும் கால நிலை மாற்றத்தின் காரணமாகவே இது போன்ற நிகழ்வு ஏற்படும் என்று கூறப்படுகிறது.
மேலும் டா னா புயல் வங்க கடலில் உருவான நிலையில் புதுச்சேரியில் கடல் உள்வாங்கியதற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. புயல் கரையை கடந்த பிறகு இயல்பு நிலைக்கு திரும்பும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.