பிரதமர் மோடி நாடு முழுவதும் அவ்வப்பொழுது சுற்றுப் பயணத்தை மேற்கொண்டு வந்தார். கடந்த ஆண்டு தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் மற்றும் சுற்றுச்சூழல் ஏற்பாடு செய்த 50 – ஆம் ஆண்டு புலிகள் காப்பகத்தை பிரதமர் நரேந்திர மோடி துவங்கி வைப்பதற்காக மைசூர் சென்றிருந்தார். அப்போது ரேடிசன் ப்ளூ ப்ளாசா நட்சத்திர ஹோட்டல் மைசூரில் அமைந்துள்ளது. நரேந்திர மோடி இரண்டு நாட்கள் அந்த ஹோட்டலில் தங்கி 50 – ஆம் ஆண்டு புலிகள் காப்பக நிகழ்ச்சியில் பங்கேற்றார்
இதை தொடர்ந்து அவர் தங்கியிருந்த நட்சத்திர ஹோட்டலின் வாடகத்தொகையானது 80 லட்சம் ரூபாய் என்று கூறப்படுகிறது. மேலும் பிரதமர் நரேந்திர மோடி தங்கி இருந்த நட்சத்திர ஹோட்டலின் வாடகையை கர்நாடகா வனத்துறை செலுத்தவில்லை என்று தற்பொழுது செய்தி வெளியாகியுள்ளது. மேலும் ரேடிசன் ப்ளூ பிளாசா நிர்வாகம் தரப்பிலிருந்து எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதைத் தொடர்ந்து வாடகை பாக்கியை செலுத்தாவிட்டால் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.