கேரளா மாநிலத்தில் கடந்த சில நாட்களாகவே சில மர்ம காய்ச்சலினால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். பருவமழை தீவிரம் அடைந்த பிறகு இதுபோன்று நோய் தொற்றுகள் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. என்று சுகாதாரத்துறை விளக்கம் அளித்துள்ளது. மேலும் டெங்கு மற்றும் எலி காய்ச்சல் பரவலாக கேரளாவில் உள்ள அனைத்து இடங்களிலும் காணப்பட்ட நிலையில் தற்பொழுது கேரளாவில் பன்றிக்காய்ச்சலுக்கு ஒரு பெண் பலியானது மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் பல்வேறு வகையான காய்ச்சலினால் தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலை தொடர்ந்து நீடித்துக் கொண்டிருக்கும் பொழுது தற்பொழுது பன்றிக்காய்ச்சல் என்பது அனைவரையும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
டெங்கு மற்றும் எலி காய்ச்சல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இதை கட்டுப்படுத்துவதற்கு சுகாதாரத் துறை பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது மேலும் கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு வரும் அனைத்து வாகனங்களும் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்து தமிழகத்திற்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.
மேலும் பன்றி காய்ச்சலினால் உயிரிழந்த பெண் வயநாடு மாவட்டம் மானந்தவாடி அருகே உள்ள தாளப்புழா என்ற பகுதியைச் சேர்ந்த 48 வயதுடைய இந்த பெண் கடந்த சில நாட்களாகவே உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் அவருக்கு பரிசோதனை செய்தது பன்றி காய்ச்சல் இருப்பது தெரிய வந்தது இதை அடுத்து தீவிர சிகிச்சை பெற்று வந்த அந்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கேரளா மாநிலத்தில் டெங்கு மற்றும் எலி காய்ச்சலை தொடர்ந்து பன்றிக்காய்ச்சலும் பரவும் என்ற அபாயம் ஏற்பட்டுள்ளது.இதைத் தொடர்ந்து கேரள மாநிலத்தில் உள்ள மக்கள் மிகுந்த அச்சத்தில் இருந்து வருகின்றனர்.