இந்திய தபேலா கலைஞர், இசையமைப்பாளர், தாள வாத்தியக்காரர், இசை தயாரிப்பாளர் மற்றும் திரைப்பட நடிகர் ஆவார். இவர் தபேலா கலைஞர் அல்லா ரக்காவின் மூத்த மகன். அவர் எல்லா காலத்திலும் சிறந்த தபேலா கலைஞர்களில் ஒருவராக இருந்தார்.
தந்தையைப் போலவே ஜாகிர் உசேன் சிறுவயது முதல் இசை நிகழ்ச்சிகளை நடத்தி வந்தார். ‘தால்’ உட்பட ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பிலும் ஜாகிர் உசேன் தனது பங்களிப்பை ஆற்றியுள்ளார்.
ஜாகிர் உசேன் அமெரிக்காவில் சான் பிரான்சிஸ்கோவில் தனது குடும்பத்துடன் வாசித்து வந்தார் கடந்த வாரம் ஜாகிர் உசேன் இருதய நோய் காரணமாக ஐ சி யு வில் அனுமதிக்கபட்டுள்ளார். சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட ஜாகிர் உசேன் உயிரிழந்ததாக தகவல் பரவி வந்தது.
ஜாகிர் உசேன் உடல்நிலை பற்றிய அவர் குடும்பத்தார்கள் ஜாகிர் உசேன் உயிர் இழக்கவில்லை அவர் தொடர்ந்து சிகிச்சை பெற்று தான் இருக்கிறார் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் இது போன்ற தவறான கருத்துக்களை யாரும் வெளியிட வேண்டாம் எனவும் அவர் குடும்பத்தினர் கேட்டுக் கொண்டு இருந்தனர் தற்போது ஜாகிர் உசேன் உயிர் பிரிந்து விட்டதாக குடும்பத்தினர் அறிவித்தார்கள்.
ஜாகிர் உசேனது மறைவானது ரசிகர்களை மிகவும் சோகத்தில் மூழ்கச் செய்துள்ளது. இவரது மறைவானது ரசிகர்கள் மட்டுமின்றி பல்வேறு தரப்பினர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
ஜாகிர் உசேன்னுடைய இசை சேவைக்கு பத்மஸ்ரீ பத்மபூஷண் பத்ம விபூஷண் விருதுகள் வழங்கப்பட்டன. அதுமட்டுமல்லாது உயரிய விருதான கிராமி விருதை 4 முறை சர்வதேச அளவில் வென்றுள்ளார். இத்தகைய சிறந்த இசை அமைப்பாளரின் மறைவானது இசை பிரியர்களை சோகத்தில் மூழ்கச்செய்துள்ளது.