அண்மையில் டெலிகிராம் இன்னும் ஆப். அதில் உள்ள பாட் வசதியின் மூலமாக யாருடைய ஆதார் எண் அல்லது மொபைல் எண்ணை பதிவு செய்தால் உடனடியாக அவர்களைப் பற்றிய முழு விவரமும் வெளியாகி வந்தது இதனால் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாகியது.அதாவது கொரோனா காலகட்டத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்காக அனைவரும் கொடுத்த ஆதார் எண் மொபைல் எண் ஆகிய இவ்விரண்டின் மூலமாக இந்த தகவல்கள் கசிந்துஉள்ளது என்பதை பின்னர் போலீசார் கண்டறிந்தனர். இதன் பின்னர் போலீசார் விசாரணையை தீவிரபடுத்தியதை ஒட்டி ஒருவரை கைது செய்தனர் டெல்லி போலீஸ் .
விசாரணையை தீவிர படுத்தியதனின் காரணமாக சமூக ஊடக தலங்களில் COWIN பக்கத்தில் இருந்து தகவல்களை கசியவிட்டதாக கூறி பீகாரை சேர்ந்த ஒருவரை டெல்லி காவல்துறை சிறப்பு பிரிவினர் அவரது வீட்டில் இருந்தே கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. மற்றும் அவருக்கு உதவியாளராக இருந்ததாக மற்றொரு நபரையும் கைது செய்தது டெல்லி காவல்துறையினர்.குற்றம் சாட்டப்பட்டவரின் தாயார் சுகாதாரப் பணியாளராக பணிபுரிகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.