பல இடங்களில் தக்காளியின் விலை உயர்வால் தக்களிகாக தக்காளி வியாபாரி, விவசாயி கொலை செய்யப்பட்டுள்ளனர். தற்போது தக்காளியின் விலை அனைத்து மாநிலங்களிலும் ரூபாய் 100 முதல் 150 வரை விற்பனை செய்து வருகின்ற நிலையில்,ஆந்திர மாநிலத்தில் ஒரு விவசாயி கிலோ 50 ரூபாய்க்கு தக்காளியை விட்டுள்ளார் உழவர் சந்தையில்.
ஆந்திரா மாநிலத்தில் கடப்பா என்னும் நகரில் உள்ள உழவர் சந்தையில் நேற்று தக்காளி விவசாயம் செய்யும் விவசாயி ஒருவர் அங்கு தக்காளி கிலோ 50 ரூபாய் என்று கூவி கூவி விற்றுள்ளார்.இந்த நிலையில் சந்தைக்கு வந்த மக்கள் அனைவரும் அங்கு வந்து குவிந்தனர்.
கூட்டம் அதிகம் உள்ளத்தால் ஒருவருக்கு 3 கிலோ என்ற விதத்தில் விற்பனையை துவங்கினர்.மக்கள் அனைவரும் கூட்டநெரிசல் ஏற்படாமல் இருபதற்காக ,அங்கு வந்த மக்களை வரிசையில் நிற்கும் படி கேட்டுகொண்டார்.விவசாயி கேட்டுகொண்டதர்க்கிணங்க மக்கள் அனைவரும் வரிசையில் இருந்து.
சுமார் 2 கிலோமீட்டர் தூரம் வரையில் நின்று தக்காளியை வாங்கி சென்றனர்.கடப்பா உழவர் சந்தையில் நீண்ட வரிசையில் இருந்து தக்காளி வாங்கி சென்றது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.