மகாராஷ்டிராவில் ஒரு விவசாயி தனது வயலில் தக்காளிவிளைவித்து இருக்கிறார்.தற்போது தக்காளியின் விலை உயர்வால் தக்காளியைத் திருடி விடுவார்கள் என்ற அச்சதில் வயலில் கண்காணிப்பு கேமரா வைத்து அவர் பாதுகாத்து வருகிறார்.கடந்த சில மாதங்களாக தக்காளியின் விலை மல மலவென்று உயர்ந்துள்ளது.
பல இடங்களில் தக்காளியை திருடி செல்கின்ற அளவுக்கு தக்காளியின் விலையும் உயரிந்துள்ளது .இந்த நிலையில் பல மாநிலங்களில் இதன் விலை கிலோவுக்கு ரூ.200-க்கும் அதிகமாக விற்கப்பட்டு வருகிறது.மகாராஷ்டிராவில் தக்காளி விலை விண்ணைத் தொட்டும் அளவிற்கு அதிகம் ஆகியுள்ளது . தக்காளியை விற்று கோடிக் கணக்கில் பணம் கிடைத்ததாக பல பத்திரிகைகளில் செய்திகள் வந்துள்ளனர்.
இந்தநிலையில் மகாராஷ்டிர மாநிலம் அவுரங்காபாத்திலிருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் ஷாபூர் பஞ்சார் என்ற கிராமம் ஒன்று உள்ளது.அந்த ஊரை சேர்ந்த விவசாயி ஷரத் ராவ்டே. இவர் வயலில் தக்காளியை பயிரிட்டுள்ளார் தற்போது உள்ள தக்காளியின் விலை உயர்வால் 22 கிலோ முதல் 25 கிலோ அடங்கிய தக்காளி பழங்கள் பெட்டி ரூ.3 ஆயிரம் வரை விலை வருகிறது.5 ஏக்கர் பரப்புள்ள வயலில் கண்காணிப்புக் கேமராக்களை பொருத்தி கண்காணித்து வருகிறார்.இந்த முறை ரூ.6 லட்சம் முதல் ரூ.7 லட்சம் வரை பணம் ஈட்ட முடியும் என்று கூறுகிறார்.இதனால் யாரவது தக்காளியை திருடிச் சென்றுவிடுவர்கள் என்ற அச்சத்தில் கேமரா பொருத்தப்பட்டுள்ளது.
ஷரத் ராவ்டே கூறுகையில் :
“எங்களது கிராமம் அருகிலுள்ள கங்காப்பூர் பகுதியில் எனக்கு வயல் உளளது. அங்கு விளைவித்திருந்த 25 கிலோ தக்காளியை 10 நாட்களுக்கு முன்பு சிலர் திருடிச் சென்றுவிட்டனர்.இதனால் பல நஷ்டம் ஏற்பட்டது எனக்கு எனவே நான் வயலில் கண்காணிப்பு கேமராக்களைப் பொருத்தினேன்.இந்தக் கேமராக்கள் சூரிய சக்தி மூலம் இயங்கும் இதற்க்கு மின் இணைப்பு தேவையில்லை.அதுமட்டுமின்றி இந்த கேமராக்களை எனது செல்போனில் இணைத்துள்ளேன். அதன்மூலம் அடிக்கடி வயலை கண்காணித்துக் கொள்வேன்’’ என்று அவர் கூறினார்.