ரயிலில் பொது பெட்டிகளில் பயணிக்கும் பயணிகளுக்கு உணவு மற்றும் தண்ணீர் வாங்குவதில் சிரமம் ஏற்படுகிறது, ரயில் நிலையங்களில் உணவின் விலை ஆனது அதிக அளவில் விற்கப்படுகிறது இதனால், பொது பெட்டிகளில் பயணிக்கும் பயணிகள் அதிக விலையில் விற்கும் உணவு மற்றும் தண்ணீர் பாட்டில்களை வாங்க வேண்டியுள்ளது.
எனவே இதற்கு தீர்வு காணும் வகையில் புது பெட்டிகளை பயணிக்கும் பயணிகளுக்கு மலிவான விலையில் உணவு வழங்கும் திட்டத்தை தற்போது முதல் கட்டமாக 14 ரயில் நிலையங்களில் இந்தத் திட்டத்தை தொடங்கியுள்ளார் பி.ஆர்.ஓ. ராஜேஷ் காரே. அதுமட்டுமின்றி முன் பதிவு இல்லாத பொது பெட்டிகள் நிற்கும் நடைமேடை அருகே இந்த கடைகளை அமைக்கப்பட்டுள்ளன.
இதன் ஆரம்ப விலை 20-ல் இருந்து துவங்குகிறது ஏழு பூரி மற்றும் அதனுடன் உருளைக்கிழங்கு, ஊறுகாய், அடங்கிய இதன் விலை 20 ரூபாய்க்கும், சாதம் கிச்சடி மசால் தோசை உள்ளிட்ட ஏதேனும் ஒரு காம்போ உணவு வகை ரூபாய் 50க்கு விநியோக செய்யப்பட உள்ளதாக வடக்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
தற்போது முதல் கட்டமாக 14 ரயில் நிலையங்களில் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது இந்த திட்டத்தை வடக்கு மண்டலத்தில் உள்ள 59 ரயில் நிலையங்களில் மலிவான விலைக்கு உணவு வழங்க ரயில்வே முடிவு செய்துள்ளது.