நாட்டில் முதன் முறையாக வாடகை தாய் மூலம் ஓங்கோல் பசு கன்று ஈன்றுள்ளது.
திருப்பதி கோசாலையில் 200 உயர் ரக நாட்டு பசுக்கள் உள்ளன.இங்கு வாடகை தாய் முறை மூலம் பசு ஒன்று சாகிவால் இனத்தை சேர்ந்த கன்றை ஈன்றுள்ளது.திருப்பதி கோவிலுக்கு நெய்வேய்தியங்களுக்கு நாட்டு பசுவின் பால்,நெய்தான் பயன்படுத்தப்படுகிறது.இங்கு 500 நாட்டு பசுவும்,200 உயர் ரக பசுவும் உள்ளது.இன்னும் 300 பசுக்களை தர பக்கதர்கள் தயாராக உள்ளனர்.
அதிக பால் உற்பத்திக்காக கலப்பின முறையில் உற்பத்தி செய்ய கோவில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.இதனை அடுத்து திருப்பதி தேவஸ்தானமும்,திருப்பதியில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா விலங்கியல் பல்கலைக்கழகமும் கடந்த வருடம்ஒப்பந்தம் ஒன்று செய்து கொண்டது.
அதன் அடிப்படையில் வட மாநிலங்களில் பசுக்களின் கருமுட்டைகளை ஸ்ரீ வெங்கடேஷ்வரா விலங்கியல் ஆய்வகத்திற்கு கொண்டு வந்தனர்.உயர் ரக நாட்டு காளைகளின் விந்தணுக்கள் கருத்தரிக்க செய்யப்பட்டன.
அதனை ஓங்கோல் போன்ற உயர் ரக நாட்டுப் பசுக்களின் கர்ப்பபையில் செலுத்தி கோசோலையில் வளர்த்து வந்தனர்.இதன் மூலம் நாட்டிலேயே முதன் முறையாக திருப்பதி தேவஸ்தானத்தில் வாடகை தாய் மூலம் உங்கள் பசு சாகிவால் இனத்தைச் சேர்ந்த கன்று ஒன்றை ஈன்றுள்ளது.அந்த கன்று குட்டிக்கு “பத்மாவதி” என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.மேலும் அடுத்த ஐந்து ஆண்டுகளில் 324 உயர்ரக கன்றுகள் உற்பத்தி செய்ய இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.