மத்திய பிரதேசத்தில் தன் பிள்ளைகளை பிச்சை எடுக்க வைத்து வெறும் 45 நாட்களில் 2.5 லட்சம் சம்பாதித்த பெண். இந்த செய்தி அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரதேசம் இந்தூரில் பல தொண்டு நிறுவனங்கள் அரசுடன் இணைந்து பிச்சைக்காரர்கள் இல்லாத நகரமாக மாற்றுவதற்கு பல முயற்சிகளை ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் உஜ்ஜைனி சாலையில் பெண் ஒருவர் அவரது மகளுடன் பிச்சை எடுப்பதை பர்வேஷ் என்ற தனியார் தொண்டு நிறுவனம் கவனித்துள்ளது. இதைத் தொடர்ந்து பிச்சை எடுக்கும் அந்தப் பெண் மற்றும் அவரது மகளை மீட்டனர். அவர்களிடம் இருந்த பையை சோதனை செய்ததில் 90 ஆயிரத்து 200 ரூபாய் இருப்பது தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து அந்தப் பெண் மற்றும் அவரது மகளிடம் விசாரணை செய்ததில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்தன. அந்த பிச்சை எடுக்கும் பெண்ணின் பெயர் இந்திரா அவர் ராஜஸ்தானி சேர்ந்தவர் என்றும் அவருக்கு திருமணம் ஆகி 5 பிள்ளைகள் இருப்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து இந்திரா பாய் தனது மூன்று பிள்ளைகளை சாலைகளில் பிச்சை எடுக்க வைத்து 45 நாட்களில் 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் சம்பாதித்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.
8 வயதுடைய ஒரு மகளையும், 9 மற்றும் 10 வயதான இரண்டு மகன்களையும் உடலில் காயங்களை ஏற்படுத்தி பிச்சை எடுக்க வைத்தது தெரியவந்துள்ளது.. 45 நாட்களில் 2 லட்சத்து ஐம்பதாயிரம் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்தது தெரிய வந்த நிலையில் அதிலிருந்து 1 லட்சம் ரூபாய் இந்திரா பாய்யின் மாமனார் வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளார்.
மேலும் 50 ஆயிரம் ரூபாயை நிரந்தர வைப்பு திட்டத்தில் முதலீடு செய்ய வந்துள்ளதும் தெரியவந்துள்ளது. இதைத் தொடர்ந்து சமீபத்தில் இந்திராபாயின் கணவர் இதுபோன்று வரும் பணத்தை வைத்து ஸ்கூட்டர் வாங்கி உள்ளது என பல திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டுள்ளார். மேலும் ராஜஸ்தானில் இந்திரா பாய் குடும்பத்தினர் இரண்டு அடுக்குமாடி வீடு கட்டியுள்ளது தெரியவந்துள்ளது. இந்த தகவல்களை அந்த தொண்டு நிறுவனம் போலீசாருக்கு தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து இந்திரா பாய் போலீசார் கைது செய்தனர் மேலும் அவரது இரண்டு மகன்கள் தப்பி ஓடிவிட்டனர். இதைத்தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.