Single என்றால்? காதல் வாழ்க்கையை முற்றிலும் வெறுத்து தனியாக வாழ்வதே சிறந்தது என்ற நபர்கள் தங்களை சிங்கள் என்று சொல்லிக் கொள்வார்கள். இதுகுறித்து ஆய்வுகளும் மேற்கொள்ளப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. இப்போது அதன் முடிவுகளும் வெளிவந்துள்ளது.
Single தொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வின் முடிவில் Single ஆக இருக்கும் ஆண்களை விடவும் Single ஆக இருக்கும் பெண்களே அதிக அளவில் நிம்மதியாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறார்கள் என்று ஆய்வின் முடிவுகள் வெளிவந்துள்ளது.
இந்த ஆய்வின் முடிவானது 2020ல் இருந்து 2023 வரை உள்ள காலகட்டத்தில் நடத்தப்பட்ட 10 ஆய்வுகளின் பட்டியலை கொண்டு ஆய்வின் முடிவானது வெளியிடப்பட்டுள்ளது. இத்தகைய ஆய்விற்கு சுமார் 5,941 பேர் என ஆண்கள் மற்றும் பெண்கள் தேர்ந்தெடுக்கபட்டார்கள்.
இதற்காக தேர்வாகிய நபர்கள் சரியாக 31 வயது இருப்பவர்களும் 18 முதல் 75 வயது இருப்பவர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
அவர்களிடத்தில் Single ஆக இருக்கக்கூடிய வாழ்க்கையை பற்றியும் முன்பு காதல் செய்து கொண்டிருக்கும் பொழுது காதல் துணை குறித்த கேள்விகளும் கேட்கப்பட்டு இருந்தது.
Single ஆக இருக்கும் பெண்கள் தான் சராசரியாக காதல் மட்டும் இன்றி நட்பு குடும்பம் அனைத்து உறவுகளும் மூலம் சந்தோஷத்தையும் அடைந்து திருமணம் அல்லது காதல் போன்றவற்றில் கவனத்தை செலுத்தாமல் உடல் நலன், வேலை, பயணம் ஆகியவை மட்டும் தம்மை முன்னேற்றம் குறிக்கோளாக கருதுவதும் ஆய்வின் முடிவில் தெரியவந்துள்ளது.
இங்கிலாந்தின் Nottingham பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வின் முடிவில் Single ஆண்களை விட Single பெண்களே வாழ்க்கையில் அதிக மகிழ்ச்சியாக இருப்பதாக தெரியவந்தது.