ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் ஆனது வரும் காலங்களில் ஹெல்மெட் அணிந்தாள் மட்டுமே வாகனம் ஓட்டக்கூடிய டெக்னாலஜியை அறிமுகப்படுத்த உள்ளதாக தகவல் . இதற்காக ஹெல்மெட் டிடெக்ஷன் தொழில்நுட்பக் காப்புரிமை கோரி விண்ணப்பித்து இருக்கிறது ஓலா எலக்ட்ரிக் நிறுவனம்.இது போன்ற அம்சங்கள் எதிர்காலத்தில் வரப்போகின்ற வாகனங்களில் காணப்படலாம்.
இவை அனைத்தும் வாகனங்களை ஓட்டக்கூடிய ஓட்டுநர்களையும்,ஓட்டுனர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு புதிய வகை டெக்னாலஜியை அறிமுகப்படுத்த உள்ளது ஓலா எலக்ட்ரிக் நிறுவனம். இது வாகனம் ஓட்டுபவர் ஹெல்மெட் அணியாத சூழலில், வாகனத்தை இயக்க அனுமதிக்காது. அதாவது ஹெல்மட் அணியாமல் வாகனத்தை ஸ்டார்ட் செய்ய முடியும். ஆனால், வாகனத்தை ரைட் மோடிற்கு மாற்ற அனுமதிக்காது.
ஹெல்மெட் அணிந்தால் மட்டுமே வாகனத்தை இயக்க முடியும்.வாகனத்தை ஸ்டார்ட் செய்தவுடன் பார்க் மோடிலேயே இருக்கும் ஹெல்மெட் அணிந்திருப்பதை உறுதி செய்த பின்னரே வாகனத்தை இயக்க முடியும். அதை உறுதி செய்ய வாகனங்களை கேமராமற்றும் சென்சார் பொருத்தப்பட உள்ளன. இதற்கான காப்புரிமை வழங்கப்படும் பட்சத்தில். இந்த அம்சம் எதிர்கால வாகனங்களில் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கலாம்.