ஹெல்மெட் அணியாதவர்களுக்கு லைசென்ஸ் ரத்து செய்யப்படும் என்று அரசு அதிரடி உத்தரவு விடுத்துள்ளது.
புதுச்சேரியில் ஹெல்மெட் அணிவது கட்டாயமாக்கப்படபோகிறது. சாலை விபத்துகளும் உயிரிழப்புகளும் அதிகமாக ஏற்படுகின்ற காரணத்தால் இரு சக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிவது அவசியமான ஒன்றாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. காங்கிரஸ் ஆட்சியின் போது அரசியல் கட்சிகளின் தொடர் எதிர்ப்பின் காரணமாக ஹெல்மெட் அணிவது கட்டாயம் என்பதிலிருந்து விலக்கி ஹெல்மெட் அணிவது விழிப்புணர்வாக மட்டுமே கருதப்பட்டது.
சாலை விபத்துகளினால் உயிரிழப்புகள் அதிகமாக ஏற்படுவதால் ஜனவரியில் இருந்து ஹெல்மெட் அணிவது புதுச்சேரியில் கட்டாயமாகப்படுகிறது
வருகிற ஜனவரி 1ஆம் தேதி முதல் வாகன ஓட்டிகள் மட்டுமில்லாமல் பின்னால் அமர்ந்திருப்பவர்களுக்கும் தலைக்கவசம் கட்டாயம் என்ற உத்தரவு விடுக்கப்பட்டுள்ளது. இந்த விழிப்புணர்வுகளை மக்களுக்கு கொண்டு செல்லும் வகையில் காவல்துறையினர் பேண்ட் வாத்தியம் இசைத்து விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்துகின்றனர்
தலைக்கவசம் அணியாமல் செல்பவர்களுக்கு ரூபாய் 1000 அபராதமும் மூன்று மாதங்கள் வரை ஓட்டுநர் உரிமத்தை (லைசன்ஸ்) ரத்து செய்வதாகவும் எச்சரித்துள்ளார்கள் காவலர்கள்.