லேண்ட் ரோவர் நிறுவனமானது 2024 ரேன்ஜ் ரோவர் எவோக் மூன்று வித நிறங்களில் தயாரிக்கப்பட்டுள்ளது . அது மட்டும் இன்றி எவோக் மாடலில் பெட்ரோல் ஹைப்ரிட் மோட்டார்களில் வழங்கப்பட்டு உள்ளது. 2024 ரேன்ஜ் ரோவர் எவோக் வாகனத்தில் வெளிப்புறத் தோற்றம் உள்புற தோற்றமும் அதிக அளவில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
தன் சிறப்பு அம்சங்களாக 2024 ரேன்ஜ் ரோர் எவோக் மாடலில் சிரவக வடிவம் கொண்ட மெஷ் முன்புற கிரில், பிக்சல்-1 எல்இடி ஹெட்லேம்ப்கள், சிக்னேச்சர் எல்இடி டிஆர்எல்கள், புதிய பம்ப்பர் வழங்கப்பட்டு இருக்கிறது. இதன் ப்ரோஃபல் பகுதியில் கூப் போன்ற தோற்றம், கேரக்டர் லைன்கள், ஃபிலஷ் டோர் ஹேன்டில்கள் வழங்கப்பட உள்ளன அதுமட்டுமின்றி, இத்துடன் முற்றிலும் புதிய அலாய் வீல்கள், அதிகபட்சம் 21 இன்ச் வரையிலான அளவுகளில் வழங்கப்படுகின்றன.
வாடிக்கையாளர்கள் புதிய ரேன்ஜ் ரோவர் எவோக் மாடலை அரோய்ஸ் கிரே, டிரைபெகா புளூ மற்றும் கொரிந்தியன் பிரான்ஸ் என மூன்று நிறங்களில் ஒன்றை தேர்வு செய்யும் வசதி வழங்கப்படுகிறது.இது டிசி ஃபாஸ்ட் சார்ஜர் மூலம் பேட்டரியை 80 சதவீதம் வரை சார்ஜ் செய்ய 30 நிமிடங்களையே எடுத்துக் கொள்கிறது.