TNPL தொடரின் நேற்று(ஜூன் 19) நடைபெற்ற 17- வது லீக் ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ்- சேலம் ஸ்பார்டன்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற சேப்பாக் அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.
விஜய் சங்கர் சொதப்பல்
முதலில் ஆடிய சேலம் ஸ்பர்டன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 160 ரன்கள் எடுத்தது. கேப்டன் அபிஷேக் 47 ரன்களும், ஹரி நிஷாந்த் 31 ரன்களும், சன்னி சாந்து 30 ரன்களும் எடுத்தனர். விஜய் சங்கர் 2 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றமளித்தார். சேப்பாக் அணி சார்பில் பிரேம் குமார் 3 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.
சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அபார வெற்றி
161 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் ஆஷிக் 36 பந்தில் 56 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். மோகித் ஹரிஹரன் 32 ரன்கள் எடுத்தார். ஜெகதீசன் அரை சதம் கடந்து 50 ரன்னில் ஆட்டமிழந்தார். இவர்களது அதிரடியான ஆட்டத்தால் இறுதியில், சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 16.3 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 162 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
ப்ளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி
ஏற்கெனவே சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி தான் மோதிய 4 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றிருந்தது. இந்நிலையில், டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரில் தொடர்ச்சியாக ஐந்தாவது வெற்றியை வசப்படுத்தி சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி ப்ளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. சேப்பாக் அணி பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என அனைத்து துறைகளிலும் சிறப்பாக விளங்கியதாகத் ரசிகர்கள் கூறுகின்றனர்.