இலங்கையில் இன்று மதியம் ( 01.07.2023 ) நிலநடுக்க அதிர்வு உணரப்பட்டதாக மக்கள் அச்சத்தில் இருக்கின்றனர். இந்த ஆழ்கடல் நில அதிர்வானது இலங்கையில் உள்ள தென்கிழக்கு கடற்கரையில் இருந்து 1200 கிலோமீட்டர் தூரத்தில் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
பல பகுதிகளில் மக்கள் அச்சத்தில் இருக்கின்றனர். பத்தரமுல்ல, அக்குரஸ்ஸ மற்றும் கொழும்பு பகுதிகளைச் சேர்ந்த மக்கள் இந்த நில அதிர்வை உணர்ந்ததாகவும் கூறப்படுகிறது.
மேலும் கொழும்பை சுற்றி உள்ள சில பகுதிகளிலும் லேசான நில அதிர்வை உணரப்பட்டதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதைத் தொடர்ந்து பல பகுதிகளில் மக்கள் அச்சத்துடன் இருந்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த நில அதிர்வானது எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை என்ற தகவலும் வெளியாகி உள்ளது.