மிக்ஜாம் புயலால் தமிழகத்தில் நான்கு மாவட்டங்கள் மிகுந்த பாதிப்புக்கு ஆளாகினர். சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு போன்ற மாவட்டங்கள் தற்பொழுது தான் மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பி இருக்கிறது.
பல தாழ்வான பகுதியில் வெள்ள நீர் சூழ்ந்து மக்கள் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியது. மக்களின் உடைமைகள் வெள்ளை நீரால் பறிபோனது. வேளச்சேரி, முடிச்சூர், தாம்பரம், பல்லாவரம் போன்ற பல பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்து கடல் போல் காட்சி அளித்தது.
அரசு தரப்பிலிருந்து பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தது. தற்பொழுது பாதிக்கப்பட்ட பகுதியில் இருக்கும் மக்களுக்கு நிவாரணத் தொகை அரசு தரப்பில் இருந்து வெளியிடப்பட்டுள்ளது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள பாதிக்கப்பட்ட பகுதியில் வாழும் மக்களுக்கு நிவாரண தொகையாக ரூ. 6000 வழங்கப்படும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இந்த நிவாரணத் தொகை எதன் அடிப்படையில் மக்களுக்கு வழங்கப்படும் என்று பெரும் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அந்த சந்தேகத்திற்கு விளக்கமளித்துள்ள தமிழ்நாடு அரசு ரேஷன் கார்டு வைத்திருப்போர் மற்றும் ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்துள்ளோர், பல ஆண்டுகளாக வாடகை வீட்டில் வசிப்போர், கேஸ் பில் போன்ற அடிப்படையில் இந்த நிவாரண தொகை வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு விளக்கமளித்துள்ளது.