வருடா வருடம் பொங்கல் பண்டிகை என்றாலே ரேஷன் கடைகளில் பரிசு பொருட்கள் வழங்கப்படுவது வழக்கம்.
தமிழக அரசு பொங்கல்பரிசுதைத்திங்கள் முதல் நாள், உழவர் திருநாளாம் பொங்கல் தமிழகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. பொங்கல் அன்று அதிகாலையில் இருந்து மக்கள் அனைவரும் உற்சாகமாக வண்ண கோலம்மிட்டு பொங்கல் வைத்து,கரும்பு, மற்றும் காய்கறிகள் சமைத்து அதனை சூரியனுக்கு படைத்து பொங்கல் பண்டிகை சிறப்பாக கொண்டாடுவார்கள். உழவர் திருநாள் ஆகிய இந்த தினத்தை தமிழக அரசு சிறப்பிக்கும் வகையில் அனைவருக்கும் பொங்கல் பரிசு வழங்கி வருகிறது.
அவைகள் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் முழு கரும்பு ஒன்று ரூபாய் 1000 ரொக்க தொகை ரேஷன் கடைகளின் மூலம் மக்களுக்கு விநியோகம் செய்யப்படுகிறது.போன ஆண்டு கூட மாநில அரசு ஊழியர்,வருமான வரி செலுத்துவோர், பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரிவோர், சர்க்கரை அட்டைதாரர், பொருள் இல்லா அட்டைதாரர்களை தவிர்த்து மற்ற அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூபாய்1000 ரேஷன் கடைகளின் மூலம் தமிழக அரசு மக்களுக்கு பரிசு பொருட்களை வழங்கியது.
இந்த முறை அனைத்து அட்டைதாரர்களுக்கும்1000 ரூபாய் வழங்க அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளிவர தொடங்கியுள்ளது. இது பற்றிய அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை.
இதை அடுத்து ஒவ்வொரு மாதமும் 15ஆம் தேதி வழங்கப்பட்டு வருகின்ற மகளிர் உரிமை தொகையானது ஜனவரி மாதம் பத்தாம் தேதியே வரவு வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது தமிழக அரசு வழங்கிகொண்டிருக்க கூடிய மகளிர் உரிமைத்தொகை1000 ரூபாயும் பொங்கல் பரிசு 1000ரூபாய் சேர்த்து பதிவு வைக்கப்பட்டு மொத்தமாக ரூபாய் 2000 கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பொதுமக்கள் உற்சாகமாக இருந்து வருகின்றனர்.