யூடியூப் உதவியின் மூலம் பிரசவம்:
ராஜசேகர் என்பவர் புதுக்கோட்டை அருகில் உள்ள அறந்தாங்கியில் பெரிய சங்கீரையில் வசித்து வந்தவர் அவரது மனைவி அபிராமி கர்ப்பமாக இருந்தார். இவர்கள் குழந்தைபேருக்காக அபிராமியை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல் செல்லாமல் ராஜசேகரம் அவரின் தாயாரும் சேர்ந்து யூடியூப் காணொளியை பார்த்து வீட்டிலேயே பிரசவம் செய்ய துணிந்து உள்ளனர்.
வீட்டிலேயே பிரசவம் பார்க்கப்பட்டதால் பச்சிளம் குழந்தை உயிர் இழந்துள்ளது. மற்றும் அபிராமி உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் அறந்தாங்கி அரசுமருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில் அவர்கள் மீது விசாரணை நடத்தப்பட்டது முதலில் கர்ப்பமாக இருந்த போது அலோபதி மருத்துவத்தை செய்துள்ளனர் ,அப்போது குழந்தை இறந்து விட்டதால் மீண்டும் அதுபோல் நடக்காமல் இருப்பதற்காக தான் வீட்டிலேயே பிரசவம் பார்க்கப் பட்டதாக பதிலளித்துள்ளனர் ,இதனால் தான் இரண்டாவது கர்ப்பத்தை சுகாதார துறையினரிடம் மறைத்து விட்டதாகவும் கூறியுள்ளனர்.
காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில் யூடியூப் பார்த்து பிரசவம் செய்ததால் குழந்தை உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பாதிப்பை உண்டாக்கியுள்ளது.