மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்டத்தின் ஊதியத்தை மத்திய அரசு உயர்த்தி உள்ளது. இதற்கான அரசாணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் 100 நாள் வேலை திட்டம் மிகச் சிறப்பான முறையில் செயல்பட்டு வருகிறது. தற்பொழுது நடைபெற்று வரும் 100 நாள் வேலை திட்டத்தின் ஒரு நாள் ஊதியம் ஆனது ரூ. 294 ஆக வழங்கப்பட்டு வருகிறது.
இதை தொடர்ந்து தற்பொழுது மத்திய அரசு 100 நாள் வேலை திட்டத்தின் ஊதிய உயர்வை அறிவித்துள்ளது. அதன்படி 100 நாள் வேலை திட்டத்தின் ஊதியம் ரூ. 319 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு கிராமப்புற மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
மக்களவைத் தேர்தல் நெருங்கும் சமயத்தில் இதுபோன்று மத்திய அரசு எடுக்கும் திட்டம் மக்களிடையே பெரும் விமர்சனத்தை ஏற்படுத்தி உள்ளது. அண்டை மாநிலங்களில் 100 நாள் வேலைத்திட்டத்தில் ஊதியம் ஆனது தமிழகத்தை விட அதிகமாகவே இருப்பது குறிப்பிடத்தக்கது.