தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலையொட்டி டி.ஜி.பி சங்கர் ஜிவால் 100 டி.எஸ்.பி.க்களை பணியிட மாற்றம் செய்ய உத்தரவை பிறப்பித்துள்ளார். தமிழகம் முழுவதும் 3 ஆண்டுகள் ஒரே இடத்தில் பணிபுரியும் காவல்துறையினரை உடனடியாக பணியிட மாற்றம் செய்ய சங்கர் ஜிவால் திடீர் உத்தரவை பிறப்பித்துள்ளார். இதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் 100 டி.எஸ்.பி.க்களை உடனடியாக இடமாற்றம் செய்வதற்கு சுற்றறிக்கை வெளியானது.
தொடர்ச்சியாக தமிழக முழுவதும் காவல்துறையில் பல்வேறு பிரிவுகளின் கீழ் பணியாற்றும் அதிகாரிகளை நாடாளுமன்றத் தேர்தலையொட்டி பணியிட மாற்றம் செய்ய முடிவு செய்துள்ளனர்.
நாடாளுமன்ற தேர்தல் காரணமாகவே ஒரே இடத்தில் 3 ஆண்டுகள் தொடர்ச்சியாக பணியாற்றும் காவல்துறையினரை இதுபோன்ற திடீர் பணியிட மாற்றம் செய்யப்படுவதாக கூறப்படுகிறது.