5 ஆம் வகுப்பு படிக்கும் மாணவி தாய் கண் எதிரே தண்ணீர் லாரி மோதியதில் பலி . இந்த சம்பவம் கோவிலம்பாக்கம் பகுதியில் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது .
சென்னையை அடுத்த நன்மங்கலம் ராஜாஜி நகர் பகுதியை சேர்ந்தவர் சாய் வெங்கடேஷ் இவரது மனைவி கீர்த்தி , கணவர் சாப்ட்வேர் என்ஜினீயராக உள்ளார் மனைவி தனியார் பள்ளியில் ஆசிரியையாராக உள்ளார் .இவர்களது மகள் லியோரா ஸ்ரீ வயது 10 இவர் மடிபாக்கத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 5ஆம் வகுப்பு படித்து வருகிறார் . நேற்று வழக்கம் போல் கீர்த்தி அவரது மகளை தனது இரு சக்கர வாகனத்தில் பள்ளிக்கு அழைத்து சென்றுகொண்டிருந்தார் .
அப்போது பின்னால் வந்த தண்ணீர் லாரி இவரது இருசக்கர வாகனத்தில் மோதியது . இதனால் இருவரும் கீழே விழுந்தனர் , தாய் இடது பக்கமும் , மகள் வலது பக்க சாலையிலும் விழுந்தனர் . பின்னால் வந்த தண்ணீர் லாரி மானவியின் வயிற்றில் ஏறி இறங்கியது , மாணவி சம்பவ இடத்திலேயே பலி ஆனார் . தாய் கண்முன்னரே மகள் உடல் நசுங்கி இறந்தது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது .
அதுமட்டுமின்றி முன்னதாகவே நன்மங்கலம், மேடவாக்கம் நெடுஞ்சாலையில் மெட்ரோ ரெயில் பணிகள் நடக்கிறது. இதனால் சாலையின் நடுவில் இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டு இருப்பதால் சாலை குறுகலாக உள்ளது. இதனால் காலை, மாலை இரண்டு வேலைகளிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது . மேலும் தண்ணிர் லாரியை ஓட்டி வந்த மன்னார்குடியை சேர்ந்த டேவிட் ராஜன் (28) தப்பி ஓடிவிட்டார் . இது குறித்து பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் அணில்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி அவரை கைது செய்தனர் .
சென்னை தண்டையார்பேட்டை நாவலன் நகரைச் சேர்ந்தவர் வர்ணமூர்த்தி வயது 58 இவர் கூலி வேலை மற்றும் மீன்பாடி வண்டி ஓட்டி வருகிறார் . நேற்று காலை அதே பகுதியில் உள்ள கைலாசம் தெருவில் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார் . அப்போது எதிர்பாராத விதமாக அங்கு வந்த லாரி அவர் மீது மோதியதில் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பலி ஆனார் . இதை தொடர்ந்து வண்ணாரப்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவரான திருவெற்றியூர் காலடிப்பேட்டையை சேர்ந்த வெங்கடேசன் வயது 44 என்பவரை கைது செய்தனர் .