விஜய் சேதுபதி ஒரு இந்திய நடிகர் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் ஆவார், அவர் முக்கியமாக தமிழ் திரைப்படங்களில் பணியாற்றுகிறார் . சேதுபதி தேசிய திரைப்பட விருது, இரண்டு தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள் மற்றும் இரண்டு தமிழ்நாடு மாநில திரைப்பட விருதுகள் உட்பட பல பாராட்டுகளைப் பெற்றவர் .
விஜய் சேதுபதி தொடர்ந்து தமிழ் சினிமாவில் சிறந்த கதாநாயகனாக மக்களிடையே வலம் வருகிறார்.
தற்போது வெளியான விடுதலை 2 திரைப்படம் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்று இருந்தது.
நடிகர் விஜய் சேதுபதி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தோழர் நல்லகண்ணுவின் நூற்றாண்டு பிறந்தநாள் விழாவில், அவரது வாழ்க்கை வரலாறு பள்ளி பாடப்புத்தகங்களில் சேர்க்கப்பட வேண்டும் என்று தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்தார்.
ஐயா நல்லகண்ணு அவர்கள் இனிமையான மனிதர் அவரது பிறந்தநாள் நிகழ்ச்சியின் கலந்து கொள்வதில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன் என்றும் விஜய் சேதுபதி கூறியுள்ளார்.
மேலும், “தோளில் துண்டு போடுவது, காலில் செருப்பு அணிவது, தீபாவளி மற்றும் பொங்கலுக்கு போனஸ் பெறுவது, 8 மணி நேர வேலை நேரம், ஞாயிற்றுக்கிழமை விடுமுறை போன்ற பல உரிமைகள், நல்லகண்ணு போன்ற தோழர்கள் போராடி பெற்றுத் தந்தவை” என்று குறிப்பிட்டார்.
இந்த உரிமைகள் பெற்றுத் தந்தவர்களின் வரலாறு அடுத்த தலைமுறையினருக்கு தெரியப்படுத்தப்பட வேண்டும் என்பதற்காக, நல்லகண்ணுவின் வாழ்க்கை வரலாறு பாடப்புத்தகங்களில் சேர்க்கப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
இந்த நிகழ்ச்சியில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர்.
விஜய் சேதுபதி அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்து கூறி உரையை நிறைவேற்றினார்.