Home தமிழ்நாடு ஆவின் பச்சை பால் பாக்கெட் விற்பனை நிறுத்தம்…!

ஆவின் பச்சை பால் பாக்கெட் விற்பனை நிறுத்தம்…!

by Pramila
0 comment

தமிழகத்தில் பால் மற்றும் பால் பொருட்கள் விற்பனையில் தமிழ்நாடு கூட்டுறவு பால்  உற்பத்தியாளர்கள் ஆவின் நிறுவனம் வாயிலாக இணைந்தது தினம் தோறும் 30 லட்சம் லிட்டர் பால் தமிழகம் முழுவதும் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.  தற்பொழுது ஆவின் நிறுவனம் ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது அதில் நவ.25 – ம்  தேதி முதல்  ஆவின் பச்சை நிற பால் பாக்கெட் விற்பனை நிறுத்த முடிவு  செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

இதை தொடர்ந்து தமிழகம் முழுவதும் ஆவின்  பச்சை பால் பாக்கெட் விற்பனை நிறுத்த ஆவின் நிறுவனம் முடிவு செய்யப்பட்டுள்ளது. தற்பொழுது இந்த செய்தி வெளியாகியுள்ளது.  ஆவின் நிறுவனத்தின் மூலம் தயாரிக்கப்படும்  பால் கொழுப்பு சத்து அடிப்படையில் பால் பாக்கெட் நிறம் மாறுபட்டு காணப்படும்.  சிவப்பு,  பச்சை,  ஆரஞ்சு என பால் பாக்கெட் நிறங்கள் பிரித்து வைக்கப்பட்டுள்ளது. ஆவின் பால் சென்னையில் மட்டும் 14.75  லட்சம் லிட்டர்  விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது. 

40 ஆண்டுகளாக தமிழகத்தில் ஆவின் பச்சை நிற பால் பாக்கெட் மக்களால் விரும்பப்பட்டு அதிகம் விற்பனையாகிக் கொண்டிருந்தது.  ஆனால் தற்பொழுது ஆவின் நிறுவனம் பச்சை நிற பால் பாக்கெட் நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. 

பச்சை நிற  பால்  பாக்கெட்டில் 4.5% கொழுப்புச்சத்து நிறைந்துள்ளதாகவும்.  இதற்காக வெளிமாநிலங்களில் இருந்து அதிக விலைக்கு வெண்ணை மற்றும் பால் பவுடர் ஆகியவற்றை ஆவின் நிறுவனம் அதிக விலைக்கு வாங்க வேண்டிய  நிலை ஏற்படுவதாகவும்,  ஆனால் பச்சை நிற பால் பாக்கெட் குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்படுவதால் வருவாய் இழப்பு ஏற்படுவதால் இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் ஆவின் நிறுவனம் தகவலை வெளியிட்டுள்ளது. 

இதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் பல மாவட்டங்களில் பச்சை நிற பால் பாக்கெட் விற்பனை நிறுத்தப்பட்டுள்ளது.  தற்பொழுது சென்னை,  திருவள்ளூர்,  செங்கல்பட்டு,  மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

 சில மாவட்டங்களில் மட்டுமே விற்பனை செய்யப்பட்டாலும் விற்பனையின் அளவு மிகவும் குறைந்து விட்டதாகவும் ஆவி நிறுவனம் படிப்படியாக பச்சை நிற பால் பாக்கெட் விற்பனையை குறைத்துக் கொண்டே வருகிறது. என்றும் தகவல் வெளியாகி உள்ளது.  மேலும்  பச்சை நிற பால் பாக்கெட் பதிலாக 3.5  சதவீதம் கொழுப்பு சத்துக் கொண்ட ‘டிலைட்’  ஊதா நிற பால் பாக்கெட் விற்பனை  அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் ஆவின் நிறுவனம் தகவலை வெளியிட்டுள்ளது. 

You may also like

Leave a Comment

@2021 – All Right Reserved. Designed and Developed by PenciDesign