தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர் சத்யராஜ். இவர் தமிழ் சினிமாவின் பல வெற்றி திரைப்படங்களை கொடுத்துள்ளார். இவருக்கு சிபிராஜ் என்ற மகனும் திவ்யா என்ற மகளும் உள்ளனர். இவரது மகன் சிபிராஜ் தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.
நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா ஊட்டச்சத்து நிபுணர் இவர் ஏழை, எளிய மக்களுக்கு மகிழ்மதி என்ற இயக்கத்தின் மூலம் பல உதவிகளை செய்து வருகிறார். தற்பொழுது திவ்யா அவரது தாய் குறித்து சில தகவல்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார்.
தனது தாய் நான்கு வருடங்களாக கோமாவில் இருப்பதாகவும் PEG டியூப் வழியாகத்தான் தற்பொழுது வரை உணவு கொடுத்துக் கொண்டிருப்பதாகவும் உருக்கமான பதிவை வெளியிட்டுள்ளார்.
மேலும் சிகிச்சை மேற்கொண்டு வருகிறோம். கூடிய விரைவிலேயே எனது தாயார் பூரண குணமடைவர் என்று எதிர்பார்ப்பில் காத்திருக்கிறோம் என்றும் பதிவிட்டுள்ளார். நடிகர் சத்யராஜின் புகைப்படத்தை பகிர்ந்து என் தந்தை பெரியார் என பதிவிட்டுள்ளார் திவ்யா.