தே.மு.தி.க தலைவரும் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகருமான கேப்டன் விஜயகாந்த் இன்று இயற்கையை எழுதியது ரசிகர்கள் மற்றும் உறவினர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பலர் வாழ்க்கையில் வெளிச்சத்தை ஏற்படுத்திய நடிகர் விஜயகாந்த் நல்ல உள்ளத்திற்கு சொந்தக்காரர் என்று போற்றப்படுகிறார். தனது கடின உழைப்பால் சினிமா மற்றும் அரசியலில் வெற்றியை கண்டவர்.
சினிமாவில் எண்ணற்ற சக நடிகர்களுக்கு பல உதவிகளை செய்தவர். தமிழ் சினிமாவில் நீங்கா இடத்தை பிடித்துள்ளவர் நடிகர் விஜயகாந்த் நடிகர் சங்க தலைவராகவும் அரசியல் கட்சி தலைவராகவும் எண்ணற்ற நன்மைகளை செய்தவர். நடிகர் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்த தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் தற்பொழுது ஒரு செய்தியை வெளியிட்டுள்ளார். நடிகர் விஜயகாந்தின் உடல் முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும் என்ற செய்தியை வெளியிட்டுள்ளார்.