தே.மு.தி.க தலைவரும் நடிகருமான விஜயகாந்த் கடந்த மாதம் சளி மற்றும் நுரையீரல் சம்பந்தப்பட்ட பிரச்சனைக்காக சென்னையில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொண்டு வந்தார். தீவிர சிகிச்சைக்கு பிறகு விஜயகாந்த் உடல்நலத்தில் சிறிது முன்னேற்றம் ஏற்பட்டது இதைத் தொடர்ந்து கடந்த 11ந்தேதி மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்.
இதை தொடர்ந்து நேற்று முன்தினம் நடிகர் விஜயகாந்திற்கு திடீரென்று உடல் நிலை மோசமடைந்தது. இதைத் தொடர்ந்து மீண்டும் சென்னையில் உள்ள மியாட் மருத்துவமனையில் நடிகர் விஜயகாந்த் அனுமதிக்கப்பட்டார். நுரையீரல் சம்பந்தப்பட்ட பிரச்சனைக்காக நடிகர் விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக சில தகவல்கள் கூறி வந்தனர். இருந்தபோதிலும் நடிகர் விஜயகாந்த் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது.
தே.மு.தி.க தலைமை அலுவலகம் விஜயகாந்திற்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும் அதற்காக அவர் சிகிச்சை மேற்கொண்டு வருவதாகவும் சில தகவலை வெளியிட்டு வந்தனர். இதைத்தொடர்ந்து கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் நடிகர் விஜயகாந்திற்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை மேற்கொண்டு வந்தனர். இன்று காலை நடிகர் விஜயகாந்த் சிகிச்சை பலனின்றி காலமானார். இதை தொடர்ந்து நடிகர் விஜயகாந்தின் உடல் மருத்துவமனையில் இருந்து சாலிகிராமத்தில் இருக்கும் அவரது வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது.