தமிழ்நாட்டில் நடிகர் விஜய் புதிதாக கட்சி தொடங்கியுள்ளார். இதை தொடர்ந்து அவரது கட்சிக்கான முதல் மாநாடு வருகின்ற அக்டோபர் 27 – ஆம் தேதி விழுப்புரம் அருகே விக்ரவாண்டியில் நடைபெற உள்ளது. இதை தொடர்ந்து மாநாட்டிற்கான வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி மாதமே தமிழகம் வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்கிய நிலையில் ரசிகர்களுக்கு மத்தியில் பெரும் எதிர்பார்ப்பையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. 2026 – யில் தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிடுவதற்காக தற்பொழுது தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். இதை தவிர வருகின்ற மாநாட்டில் நடிகர் விஜய் கட்சியின் கொள்கைகளை அறிவிப்பார் இதற்காக அவரது ரசிகர்கள் காத்துக் கொண்டுள்ளனர்.
இந்த மாநாட்டில் முக்கிய பிரபலங்கள் மற்றும் சினிமா நட்சத்திரங்கள் யாரேனும் கலந்து கொள்வாரா என்று தற்பொழுது கேள்விகள் எழுந்துள்ளது. இந்த கேள்விக்கு பதில் அளிக்கும் விதமாக நடிகர் விஷால் மாநாட்டிற்கு அழைப்பு வந்தாலும் வரவில்லை என்றாலும் கண்டிப்பாக மாநாட்டில் கலந்து கொள்வேன் என்று செய்தியை வெளியிட்டுள்ளார். தற்பொழுது இந்த செய்தி மிக வைரலாக பகிரப்பட்டு வருகிறது