நடிகை கவுதமி கடந்த சில வருடங்களாகவே பாஜகவில் உறுப்பினராக இருந்து வந்தார் இதைத்தொடர்ந்து தற்பொழுது பாஜகவில் இருந்து விலகி பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் முன்னிலையில் தற்பொழுது நடிகை கவுதமி அதிமுகவில் இணைந்துள்ளார். இதற்கு முன்னதாக பாஜகவில் நடிகை காயத்ரி ரகுராம் உறுப்பினராக இருந்து பாஜகவில் இருந்து விலக்கி அதிமுகவில் இணைந்ததை தொடர்ந்து தற்பொழுது நடிகை கவுதமியும் அதிமுகவில் இணைந்துள்ளார்.
சென்னையில் கிரீன்வேஸ் சாலையில் உள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இல்லத்தில் நடிகை கௌதமி சந்தித்து பேசியதாக தகவல் கிடைத்துள்ளது. நாடாளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்ற தேர்தலை முன்னிலைப்படுத்தி இது போன்று அரசியல் மாற்றங்கள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.