அதிமுக செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அதிமுக எம்.எல்.ஏ – கள் தொடர் அமலியில் ஈடுபட்டதால் தமிழக சட்டசபை கூட்டத் தொடரிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இதைத்தொடர்ந்து கடந்த சில நாட்களாகவே கள்ளக்குறிச்சியில் விஷ சாராயத்தை அருந்தி 60 – க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த உள்ளனர். இதை கருத்தில் கொண்டு எடப்பாடி பழனிச்சாமி சி.பி.ஐ விசாரணை நடத்த வேண்டும் என்று முறையிட்டுள்ளார். மேலும் அதிமுக எம்.எல்.ஏ – கள் திருவள்ளூர், காஞ்சிபுரம் செங்கல்பட்டு ஆகிய பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஒன்று திரண்டு இந்த உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதிமுக ஈடுபட்டு வரும் உண்ணாவிரத போராட்டத்திற்கு காவல்துறை சில கட்டுப்பாட்டு நெறிமுறைகளை வழங்கியுள்ளது. உண்ணாவிரதம் நடத்தும் இடங்களில் வாகனங்களை கொண்டு வரக்கூடாது என்றும் தனிநபரை குறித்து பேசக்கூடாது என்றும் பல்வேறு கட்டுப்பாடு நிபந்தனைகளை விதித்துள்ளது.
அதிமுக ஈடுபட்டு வரும் உண்ணாவிரத போராட்டத்தில் பாதுகாப்பை கருதி 400 போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.