Home » Blog » அதிமுகவின் முன்னாள் எம்.எல்.ஏ சத்யா நாராயணன் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை….. !

அதிமுகவின் முன்னாள் எம்.எல்.ஏ சத்யா நாராயணன் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை….. !

by Pramila
0 comment

முன்னாள் அதிமுகவின் எம்எல்ஏவான சத்யாவின் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி வருகின்றனர் .

கடந்த 2016 – 2021 ஆம் ஆண்டில் அதிமுக ஆட்சி காலத்தில் தி .நகரை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ சத்யா நாராயணன் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருகின்ற நிலையில் , இவர் வருமானத்திற்கு அதிகமாக சொத்துக் குவித்துள்ளதாகவும் , தனது சொத்தை மறைத்து தி நகர் பகுதியில் போட்டியிட்டதாகவும் சென்னை ஹைகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது .

இந்த வழக்கின் விசாரணையை இரண்டு மாதத்திற்குள் முடித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று லஞ்ச ஒழிப்புத் துறைக்கு சென்னை ஹைகோர்ட் உத்தரவிட்ட நிலையில் இன்று அதிரடியாக அதிகாலை முதலிலேயே சோதனை நடத்தி வருகின்றனர் . இவருக்கு சொந்தமான மற்றும் தொடர்புடைய 18 இடங்களில் தற்போது சோதனை நடத்தி வருகின்றனர் சென்னை உள்ள வட பழனி மற்றும் நெற்குன்றம் உட்பட 16 இடங்களிலும் மற்றும் திருவாரூர் கோவையில் சோதனை நடைபெற்று வருகிறது .

You may also like

Leave a Comment

நம் நிறுவனம்

தினமதி என்பது சந்தா இல்லாத தமிழ் இதழ் மற்றும் ஆன்லைன் சேவைகளை உலகம் முழுவதும் வழங்கும் மல்டிமீடியா நிறுவனமாகும்.

செய்திமடல்

Subscribe my Newsletter for new blog posts, tips & new photos. Let's stay updated!

Copyrights © 2024 Dinamathi.com. All rights reserved.