நேற்றைய தினம் சென்னை மெரினா கடற்கரையில் இந்திய விமான படையினரால் சாகச நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியை கண்டு கழிப்பதற்காக தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பகுதியில் இருந்து மக்கள் சென்னை மெரினா கடற்கரையில் திரண்டனர். கட்டுக்கடங்காத கூட்டத்தினால் மக்கள் கூட்ட நெரிசலில் அவதிப்பட்டனர். தமிழ்நாடு அரசு எதிர்பார்த்ததை விட அதிக அளவில் மக்கள் எண்ணிக்கை கூடியது. இதன் காரணமாகவே கூட்ட நெரிசல் ஏற்பட்டது.
இந்த சாகச நிகழ்ச்சியானது கடும் வெயிலில் நடத்தப்பட்டதால் வயதானவர்கள் குழந்தைகள் என அனைவருமே பாதிக்கப்பட்டனர். 100 – க்கும் மேற்பட்டோர் மயங்கிய நிலையில் சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும் 5 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
உயிரிழந்த குடும்பங்களுக்கு ஈடு செய்ய முடியாத அளவிற்கு பேரிழப்பாக ஏற்பட்டது. உயிரிழந்த குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் மு.க. ஸ்டாலின் தெரிவித்திருந்தார். இதை தொடர்ந்து கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 5 பேர் குடும்பத்தினருக்கு தல 5 லட்சம் ரூபாய் நிவாரண நிதி வழங்கப்படும் என்றும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.