Home தமிழ்நாடு சென்னையை  நோட்டம் விட்ட ஏலியன்ஸ்  – கடல் மேல் மர்மதட்டுக்கள் பறந்ததால் பரபரப்பு…!

சென்னையை  நோட்டம் விட்ட ஏலியன்ஸ்  – கடல் மேல் மர்மதட்டுக்கள் பறந்ததால் பரபரப்பு…!

by Pramila
0 comment

விஞ்ஞானிகள் ஏலியன்கள் என சொல்லப்படும் வேற்று கிரக வாசிகள் பற்றி நிறைய கருத்துகள் அறிவியல் உலகில் நிலவுகின்றன. பல ஆண்டுகளாக, வேற்று கிரகவாசிகளுடன் தொடர்பை ஏற்படுத்தி, அவர்கள் உண்மையிலேயே இருக்கிறார்கள் என்பதை நிரூபிக்க முயற்சித்து வருகின்றனர் விண்வெளி ஆராய்ச்சியாளர்கள்.

இந்தநிலையில் இதனிடையே சென்னையை அடுத்த முட்டுக்காடு கடற்கரையில் மாலை 5.30 மணிக்கு அமர்ந்திருந்த போது பிரதீப் பிலிப்பின் கண்ணில் நான்கு ஒளி ஏதோ ஒன்று தெரிந்துள்ளது.இதையடுத்து அவர் தனது ஐபோனில் அதனை புகைப்படம் எடுத்துள்ளார். பினனர் அந்த புகைப்படத்தை பார்த்த போது பறக்கும் தட்டு போன்று தெரிந்துள்ளது.இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் அந்த புகைப்படங்களை தற்போது வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்களில் உள்ளவை டிரோன் போலவோ சிறிய விமானம் போலவோ இல்லை. அடையாளம் கண்டுபிடிக்க முடியாத பறக்கும் தட்டாகவே அவை உள்ளது. 

கடல் பகுதியில் கடந்த 26-ந் தேதி மாலையில் மர்மமான முறையில் 4 பறக்கும் தட்டுகள் வானில் பறந்துள்ளது.தரையில் இருந்து பார்க்கும் போது வெளிச்சமாக மட்டுமே தெரிந்த இந்த பறக்கும் தட்டுகளை ஓய்வு பெற்ற சிபிசிஐடி போலீஸ் டிஜிபி பிரதீப் தனது செல்போனில் படம் பிடித்துள்ளார்.

அந்த புகைப்படத்தில் இருந்தது உண்மையில் பறக்கும் தட்டா அல்லது வேற ஏதாவது வந்ததா ?அந்த பறக்கும் தட்டில் வேறு மனிதர்கள் யாரேனும் இருந்தர்களா என்பதை பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். 

 

You may also like

Leave a Comment

@2021 – All Right Reserved. Designed and Developed by PenciDesign