தமிழகத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை என்ற திட்டத்தின் கீழ் தமிழகத்தில் உள்ள அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் மாதம் தோறும் ரூ. 1000 வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஊக்கத்தொகை மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. கலைஞர் மகளிர் உரிமைத்தொகை மாதம் தோறும் குடும்பத் தலைவிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. இதன் மூலம் நடுத்தர குடும்பத்தினருக்கு பெரும் உதவியாக இருந்து வருகிறது.
இதைத்தொடர்ந்து 2024 – 2025 ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிவிக்கையை தற்பொழுது நிதி அமைச்சர் அதிஷி தாக்கல் செய்துள்ளதில் ஒரு முக்கிய அறிவிப்பு தற்பொழுது வெளியாகி உள்ளது. அதில் 18 வயது நிரம்பிய அனைத்து பெண்களுக்கும் மாதம் தோறும் ரூ. 1000 வழங்கும் திட்டத்தை அமல்படுத்தப்பட உள்ளதாகவும் அதற்காக ரூ. 2,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
மக்களவைத் தேர்தல் நெருங்கும் சமயத்தில் இது போன்ற முக்கிய திட்டங்கள் அமல்படுத்தப்பட உள்ளதாக செய்தி வெளியாகி வருகிறது. மேலும் இத்திட்டத்தை அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் அறிவிக்கப்பட்ட நிலையில் ஆம் ஆத்மிக்கு நல்ல வரவேற்பை பெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.