அண்ணா பல்கலைக்கழகம் (Anna University) இந்தியாவின், தலைசிறந்த பல்கலைக்கழகங்களில் ஒன்றாகும். 1978ஆம் ஆண்டில், சென்னையில் நிறுவப்பட்ட இப்பல்கலைக்கழகம், பொறியியல், தொழினுட்பம் மற்றும் அதன் தொடர்புடைய அறிவியல் துறைகளில் உயர்கல்வி பட்டப்படிப்புகள் வழங்குவதுடன் ஆராய்ச்சிப் பணிகளையும் மேற்கொள்கிறது. இதன் முதன்மை வளாகம் சென்னையின் கிண்டியிலும், துணைக்கோள் வளாகம் சென்னையின் குரோம்பேட்டையிலும் உள்ளன.
சென்னை கிண்டியில் அமைந்துள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் மிகப்பெரிய அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி உள்ளது.
அண்ணா பல்கலைக்கழகத்தில் அனைத்து மாநிலங்களை சேர்ந்த மாணவ, மாணவியர்களும் பயின்று வருகின்றன. தற்போது இந்த பல்கலைக்கழகத்தில் பயிலக்கூடிய ஒரு மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தமிழகத்தை பேரதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.
பாதிக்கப்பட்ட மாணவி கொடுத்த தகவலின் அடிப்படையில் கோட்டூர்புரம் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பத்மாவதி அவர்கள் வழக்கு பதிவு செய்து நான்கு குற்றப் பிரிவுகளின் கீழ் மூன்று தனி படை அமைத்து குற்றவாளியை தேடிவந்தர் .
இந்த கொடூர செயலை அரங்கேற்றிய ஞானசேகரனை போலீசார்கள் தற்போது கண்டுபித்து கைது செய்தனர். ஞானசேகரனிடம் தொடர்ந்து விசாரணை நடத்தியதில் அவர் கோட்டூர்புரம் மண்டபச்சாலையில் பிரியாணி கடை நடத்தியதாக தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து பாலியல் வழக்கில் கைதான ஞானசேகரனுக்கு சைதாப்பேட்டை நீதிமன்றம் 15 நாள் நீதிமன்ற காவல் விதித்து உத்தரவிட்டது அதாவது ஜனவரி 8ம் தேதி வரை.
என்ன பல்கலைக்கழகம் மாணவி அளித்த எப் ஐ ஆர் புகார் மேலும் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது அதில் மாணவி தாங்கள் தனியாக இருந்த வீடியோவை வைத்து அதை கல்லூரி டீன்(பேராசிரியரிடம்) கொடுத்து டிசி கொடுக்க வைப்பதாகவும் ,மாணவியின் தந்தை போன் போன்நம்பருக்கு வீடியோவை அனுப்பி விடுவேன் என்று மிரட்டியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
மாணவிஎவ்வளவோ கெஞ்சியும் தொடர்ந்து மிரட்டலில் ஈடுபட்டுள்ளார் ஞானசேகரன். தனக்கு அடிபணியவில்லை என்றால் சமூக வலைதளங்களில் வீடியோ வெளியாக்குவதாக கூறி வலுக்கட்டாயமாக பாலியல் துன்புறுத்தல் செய்வதாகவும் எஃப் ஐ ஆர் -ல் தெரிவித்துள்ளனர்.