தமிழ்நாட்டில் ஒட்டுமொத்தமாக 2 கோடியே 21 லட்சம் குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர். இதில் கணக்கெடுப்பின்படி ஒரு கோடியே 90 லட்சம் குடும்ப அட்டைதாரர்கள் மாதம் தோறும் ரேஷன் கடையில் துவரம் பருப்பு, பாமாயில் உள்ளிட்ட பொருட்களை வாங்கி பயன்படுத்துகின்றனர். தற்பொழுது இதன் நிலையானது மிகக் குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
குறைந்த விலையில் ரேஷன் கடையில் விற்பனை செய்யப்படும் பொருட்கள் ஏழை எளிய மக்களுக்கு மிக உதவியாக இருந்தது. சமையல் எண்ணெயானது ஒரு லிட்டர் 25 ரூபாய்க்கும், துவரம் பருப்பானது ஒரு கிலோ 30 ரூபாய் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
கடந்த இரண்டு மாதங்களாக தமிழ்நாட்டில் பெரும்பாலான ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு மற்றும் சமையல் எண்ணெய் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மேலும் வருமா ஆகஸ்ட் மாதம் வரை கொள்முதல் செய்ய வேண்டிய சமையல் எண்ணெய் மற்றும் துவரம் பருப்பு கொள்முதல் செய்யப்படவில்லை என்று தகவல் வெளியாகி உள்ளது. சமையல் எண்ணெய் மற்றும் துவரம் பருப்பு வரத்து தட்டுப்பாடை தொடர்ந்து ரேஷன் கடைகளில் பொருட்களின் விலை சற்று அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.