பகுஜான் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்தவர் ஆண்ட்ரான் இவர் கடந்த மாதம் படுகொலை செய்யப்பட்டார் இதை தொடர்ந்து இவரின் கொலையில் ஈடுபட்ட நபர்களை போலீசார் தீவிர வேட்டையில் தேடி வருகின்றனர். இதைத் தொடர்ந்து சந்தேகிக்கப்பட்ட நபர்களை போலீசார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
அதிமுக, திமுக மற்றும் முக்கிய கட்சியில் இருக்கும் நபர்கள் மீது போலீசார் சந்தேகம் எழுந்துள்ளது அதைத் தொடர்ந்து சந்தேக கோணத்தில் விசாரணை தொடர்ந்து நடத்தி வருகின்றனர். இதுவரை 20க்கும் மேற்பட்ட நபர்களை போலீசார் கைது செய்துள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சந்தேகிக்கப்பட்ட வழக்கறிஞர் மொட்டை கிருஷ்ணன் வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இதைத் தொடர்ந்து அவருடன் கூட்டாளியான ரவுடி சம்போ செந்திலும் வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றுள்ளார்.
வழக்கறிஞர் மொட்டை கிருஷ்ணனை இயக்குனர் நெல்சன் மனைவி சந்தித்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இதைத்தொடர்ந்து இயக்குனர் நெல்சன் மனைவி வழக்கறிஞர் மொட்டைகிருஷ்ணனுக்கு ரூ. 75 ஆயிரம் பணம் அனுப்பி உள்ளது போலீசார் இடையே பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதைத் தொடர்ந்து இயக்குனர் நெல்சன் மனைவியிடம் போலீசார் சந்தேகக் கோணத்தில் விசாரணை செய்து வருகின்றனர்.